Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

சந்தையை விரிவுப்படுத்தும் இந்திய நிறுவனங்கள்!

சந்தையை விரிவுப்படுத்தும் இந்திய நிறுவனங்கள்!

இந்தோ கவுண்ட் இண்டஸ்ட்ரீஸ் அமெரிக்காவில் உற்பத்தி வசதிகளை கொண்டுள்ளதுடன், புதிய வணிகங்களிலும் கவனம் செலுத்துகிறது.

பகிரவும் WhatsApp Facebook

இந்தியா–அமெரிக்கா இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ளதால், இந்தியாவைச் சேர்ந்த 6 ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்கள் அமெரிக்காவைத் தவிர்த்து மற்ற நாடுகளில் உற்பத்தியை விரிவுபடுத்துவதிலும் புதிய சந்தைகளைத் தேடுவதிலும் கவனம் செலுத்துகின்றன.


அதன்படி, இந்தியாவைச் சேர்ந்த கோகல்தாஸ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம், கென்யா, எத்தியோப்பியா உள்ளிட்ட நாடுகளில் உற்பத்தி வசதிகளைக் கொண்டுள்ளது. 2025–26-ம் நிதியாண்டில் இதன் வருவாய் 3.2 சதவீதம் உயர்ந்து ரூ.3,987 கோடியாக இருந்தாலும், நிகர லாபம் 36.8 சதவீதம் குறைந்து ரூ.100 கோடியாகச் சரிந்தது.

வெல்ஸ்பன் லிவிங் நிறுவனம், அமெரிக்காவில் உற்பத்தியை விரிவுபடுத்தி வருகிறது. இருப்பினும், அதன் வருவாய் 10.9 சதவீதம் குறைந்து ரூ.9,399 கோடியாகவும், நிகர லாபம் 68 சதவீதம் சரிந்து ரூ.204 கோடியாகவும் இருந்தது.

இந்தோ கவுண்ட் இண்டஸ்ட்ரீஸ் அமெரிக்காவில் உற்பத்தி வசதிகளை கொண்டுள்ளதுடன், புதிய வணிகங்களிலும் கவனம் செலுத்துகிறது. இதன் வருவாய் ரூ.4,141 கோடியாகவும், நிகர லாபம் ரூ.126 கோடியாகவும் இருந்தது.

பேர்ல் குளோபல் இண்டஸ்ட்ரீஸ் இந்தியா நிறுவனம், வங்கதேசம், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் உற்பத்தி மேற்கொண்டு வருகிறது. இதன் வருவாய் 11.5 சதவீதம் உயர்ந்து ரூ.5,024.6 கோடியாகவும், நிகர லாபம் 17 சதவீதம் அதிகரித்து ரூ.270 கோடியாகவும் இருந்தது.

ஹிமத்சிங்கா சீடே நிறுவனம், அமெரிக்காவில் நூல் மற்றும் துணி உள்ளிட்ட புதிய தயாரிப்புகளில் கவனம் செலுத்துகிறது. இதன் வருவாய் ரூ.2,515.1 கோடியாகவும், நிகர லாபம் ரூ.61.96 கோடியாகவும் இருந்தது.

கிடெக்ஸ் கார்மென்ட்ஸ் நிறுவனம் உள்நாட்டிலேயே தெலங்கானாவில் உற்பத்தியை விரிவுபடுத்துகிறது. இதன் வருவாய் 32.1 சதவீதம் குறைந்து ரூ.666.9 கோடியாகவும், நிகர இழப்பு ரூ.13.2 கோடியாகவும் இருந்தது.
முந்தைய செய்தி
200 சொகுசு பேருந்துகளுக்கான ஆர்டரைப் பெற்றது வால்வோ
அடுத்த செய்தி
டாலருக்கு நிகராக 19 காசுகள்: 4 நாட்களில் 171 காசுகள் உயர்ந்தது ரூபாய் மதிப்பு

தொடர்புடைய செய்திகள்